Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அனைத்து திட்டங்களும் பொது மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும்….. நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…..!!!!

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து  ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் அப்துல் ஆனந்த், உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதுல்  ஆனந்த் கூறியதாவது.

தர்மபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் உத்தரவுப்படி பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்களது துறையில் செயல்பட்டு வரும் அரசு திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மேலும் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் இ- சேவை மையங்களில் அரசின் சேவைகள் காலதாமதம் இல்லாமல்  உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஒவ்வொரு அலுவலரும் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |