Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு அலெர்ட்: வேண்டாம் போகாதீங்க ப்ளீஸ்..! 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் ..!!

தமிழகம்,  புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை,  குறிப்பாக இன்று குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரளா, கர்நாடகா பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மன்னார் வளைகுடா பகுதியில் தென் தமிழக கடலோரப் பகுதி மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இருந்து  பலத்த காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் கூடும் என்றும், இந்த பகுதிகளெல்லாம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

Categories

Tech |