பின்லாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து கொண்டு விருந்து கொண்டாடங்களில் அதிகமாக ஈடுபாடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் விருந்தினர்கள் சிலர் மேலாடை இன்றி காணப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் நடந்த விருந்து ஒன்றில் இரண்டு முக்கிய நபர்கள் தொடர்பிலேயே குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.மேலும் குறித்து புகைப்படத்தில் பெண்கள் இருவர் மேலாடையின்றி முத்தமிட்டு கொள்வதுடன் அவர்களின் மார்பை பின்லாந்து என பொறிக்கப்பட்டுள்ள அடையாள அட்டையால் மறைத்து உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் சன்னா மரின் அந்த புகைப்படங்கள் தொடர்பில் வருத்தம் தெரிவித்தது, மனிப்பு கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் சன்னா மரின் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ஜூலை மாதத்தில் Ruisrock இசை விழாவிற்கு பிறகு பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்து கொண்டாட்டத்தில் குறித்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பின்லாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், பிரதமர் இல்லத்தில் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கழிவுவறைக்கு அருகில் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய புகைப்படங்கள் பதிவு செய்திருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள சன்ன மரின், ஆனால் அந்த விருந்தில் தவறான எந்த விடயமும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.