Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிஜீ-இன் ஒரு வார்த்தை… இது சரியே இல்லை..! இலங்கை யோசிக்கணும்… அண்ணாமலை அதிரடி பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீனா உளவு பார்ப்பது துரதிஷ்டவசமான விஷயம் தான், இந்திய அரசினுடைய எதிர்ப்பையும் எதிர்த்து இலங்கை வந்து சீன கப்பலை குறிப்பாக அந்த கப்பலுடைய வடிவமைப்பு, கப்பலுடைய எண்ணம், நோக்கம் எல்லாம் நாம் ஆன்லைனில் படிக்கிறோம், எல்லா இடத்தில் பார்க்கிறோம். அது நம்முடைய அரசு எதிர்த்தும் கூட, இலங்கை வந்து அவர்களுக்கு அம்புண்தோட்டா துறைமுகத்தில் விட்டிருப்பது துரதிஷ்டவசமானது தான்.

அதே நேரத்தில் இதில் சென்சிட்டிவான ஸ்டேட் தமிழ்நாடு தான், நாம் தான் மிகவும் அருகில் இருக்கிறோம், கடல் சொத்து இருக்கிறது. அதனால்அமித்ஷா ஜி வந்து டிஜிபிக்கு சொன்னார், இவரைப் பற்றி தெரியாது. அதனால் துரதிஷ்டவசமானது என்று என்பது என்னுடைய கருத்து. மோடிஜி வந்து ஒரு வார்த்தை சொன்னார். இந்தியாவும், இலங்கையும் கலாச்சார இரட்டையர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினார், கலாச்சார இரட்டையர்கள்… அதாவது நமக்கு பக்கத்து நாடாக இருந்தாலும் கூட, கலாச்சார அடிப்படையில் நாம் சகோதரராக இருக்கின்றோம் என்பதுதான் மோடிஜினுடைய பேச்சினுடைய சாராம்சம்.

அதனால் இலங்கைக்கு நாம் செய்வது நம்முடைய கடமையாக செய்கின்றோமே தவிர, அது இலங்கை யோசிக்க வேண்டும்.  இலங்கையினுடைய அரசியல் ,  இலங்கையினுடைய எண்ணம். அது இலங்கையும் வருகின்ற காலத்தில் யோசிப்பார்கள். யார் அவர்களுடைய உண்மையான நண்பன். ஏனென்றால் இன்று நாம் பேசுகிறோம்,  ஸ்ரீலங்காவினுடைய கடன் சுமைக்கும் மிக முக்கிய காரணமே சீனா தான், சீனாவிடம் எப்போது கடன் வாங்க ஆரம்பித்தார்களோ, எப்போ போர்டில் இருந்து கொழும்பு துறைமுகம் பக்கத்தில் ஹை சிட்டி கட்டமைக்க ஆரம்பித்தார்கள், அப்போதான் வலையில் சிக்கினார்கள்,

இது இலங்கைக்கு இது புதுசு இல்லை. பாதி ஆப்பிரிக்கன்  நாடுகள்  யாரெல்லாம் சீனாவிடம் கடன் வாங்கினார்களோ எல்லாருமே இந்த கடன் வளைக்குள் சிக்கி இருக்கிறார்கள். அது இலங்கை உணர்வார்கள் உணர்கின்ற காலம் வரும். இந்தியாவை பொருத்தவரை சீனா மாதிரி செய்தோம், இரண்டு எடுத்துக் கொள்ளலாம் என்பதை விட கலாச்சார இரட்டையர்களாக நாம் பணியை செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |