Categories
அரசியல் மாநில செய்திகள்

மிகவும் மோசமா இருக்கு…. நாம சண்டை போட வேண்டாம்..! இப்படியே போனா தமிழகம் அவ்வளவு தான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசம் வாரி வழங்குவதால் தமிழ்நாடு கடன் 6 லட்சம் கோடி. தயவு செய்து இதை அரசியலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்னாடி உங்களுடைய ஸ்டாண்ட் என்ன ?  இன்றைக்கு தேதியில் பிரதமருடைய வாதம், ஒரு ஒரு மாநிலத்தினுடைய நிதி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது.

ஒரு ஒரு தேர்தலிலும்  இப்படித்தான் நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆரம்பித்தால், யார் வந்து ஒரு ஒரு மாநிலத்தை காப்பாற்றுவார்கள் என்பதன் பிரதமருடைய முக்கியமான பாயிண்ட். இந்த மூன்று மாதமாக இதுதான் விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது, 2014ல் நீங்கள் கூட்டணி வைக்கும் போது என்ன? அது பற்றி பிரச்சினையே கிடையாது.

காலம் வேறு, சூழ்நிலை வேறு, தமிழ்நாடு 2 லட்சம் கோடி கடனில் இருந்தது. இன்றைக்கு 6 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இந்த வருடம் 1லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கினால் 7,10,000 கோடி கடன் போய்விடும். இந்தியாவில் எந்த மாநிலமுமே 7 லட்சம் கோடி கடன் வாங்கியது கிடையாது.

எப்படி சுகாதாரத் துறைக்கு பணம் கொடுக்க முடியும் ? எப்படி பள்ளி துறைக்கு பணம் கொடுப்பீர்கள் ? அமைச்சர் சொல்கிறார் 92 சதவீதம் பள்ளி கல்வித்துறைக்கு வருகின்ற பட்ஜெட் சம்பளமாகவே போய்விடுகிறது, நான் எப்படி கட்டிடம் கட்டுவேன் என்று.. இதெல்லாம் தானே பாயிண்ட், இந்த பாயிண்ட் தான் மக்கள் மன்றத்தில் வைக்கிறோம், மக்கள் முடிவெடுப்பார்கள்.

அவர்கள் பேசுவார்கள், அது மூலமாக ஆட்சியாளர்கள் மாறுவார்கள், அரசியல் கட்சிகள் மாறும்,  அவர்கள் வேறு மாதிரி யோசிப்பார்கள். அதுதான் விவாதமே தவிர இதில் நாம் சண்டை போடுவதற்கு ஒன்றுமில்லை. மோடிஜி மூன்று மதமாக இதை  பேச ஆரம்பித்துள்ளார். தெலுங்கானா 4 லட்சம் கோடி கடன்  அமித்ஷா ஜி பேசினார் என தெரிவித்தார்.

Categories

Tech |