திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் கூறியதாவது. என் பெயர் சசிகலா. நான் பருத்தியப்பர் கோவில் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்து 2017- ஆம் ஆண்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கி செங்கிப்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு 18 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தார். ஆனால் அந்த நபர் இன்றுவரை பணம் தரவில்லை.
இந்நிலையில் உடல்நிலை குறைவால் எனது கணவர் கடந்த மாதம் இறந்து விட்டார். அதன் பிறகு நாங்கள் கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வந்தோம். இதுகுறித்து நாங்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், காவல்துறையினரிடமும் பலமுறை புகார் அளித்து விட்டோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு வழி தெரியாமல் நான் இந்த இறுதி முடிவை எடுத்தேன் என கூறியுள்ளார். இதனை கேட்ட காவல்துறையினர் பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சசிகலா அங்கிருந்து கலந்3து சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.