Categories
தேசிய செய்திகள்

அடச்சீ….! எல்லார் முன்பு இப்படி குளித்தால்…. ஆண் குழந்தை பிறக்கும்….. அதிர்ந்து போன மனைவி….!!!!

மகாராஷ்டிரா புனேவை சேர்ந்தவர் 30 வயது பெண். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என கணவரும் அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில், தான் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரவாதியை கணவரின் குடும்பத்தினர் அணுகினர். அப்போது அவர், ‛‛அருவியில் அந்த பெண்ணை பொதுமக்கள் மத்தியில் நிர்வாணமாக குளிக்க செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். அதோடு மட்டுமின்றி கணவரின் தொழிலும் வளர்ச்சி அடையும்” என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என அந்த பெண்ணை ராய்காட் மாவட்டத்திலுள்ள அருவிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மறுப்பு தெரிவித்து இது குறித்து போலீசில் புகார் செய்தார். இந்த புகாரில், “ஆண் குழந்தை வேண்டி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருவதோடு, வரதட்சனை கொடுமை செய்கின்றனர்” என குற்றஞ்சாட்டினார் இந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 2 பேர், மவுலானா பாபா ஜமாதர் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |