LGBT பிரிவினரை தமிழக அரசின் சொல்லகராதியில் பரிந்துரைக்கப்படும் சொற்களால் கண்ணியமாக குறிப்பிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் சொல்லதிகாரப்படி LGBT பிரிவினரை மூன்றாம் பாலினத்தவர்களை மருவிய மற்றும் மாறிய பாலினத்தவர், திருநங்கை மற்றும் திருநம்பி என இடத்திற்கு ஏற்ப அழைக்கவும். தான் பாலீர்ப்பு ஆண், பெண், இரு பாலீர்ப்புடைய நபர் மற்றும் பால் புதுமையர் என அழைக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாப்பு, விதிகள் பற்றிய கொள்கை வரைவைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரியுள்ளது. இதற்குத் தமிழக அரசு 6 மாதம் அவகாசம் கேட்ட நிலையில், வழக்கு செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.