Categories
டெக்னாலஜி

சீனாவுக்கு போட்டியாக சென்னை….. ஐபோன் உற்பத்திக்கு ஆப்பிள் திட்டம்….!!!!

அமெரிக்கா – சீனா இடையே நீடிக்கும் பிரச்சினைகளால் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சீனாவுக்கு நிகராக இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் சீனாவில் ஐபோன் 14 (iPhone 14) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஐபோன் 14 மாடலை சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையிலும் உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

made in india முத்திரையுடன் இந்த ஐபோன் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்காக சீனாவில் இருந்து உதிரிபாகங்களை கொண்டுவந்து சென்னையில் எப்படி ஐபோன் 14 உற்பத்தி செய்யலாம் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |