லண்டனில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை 3.48 மணிக்கு மேற்கு லண்டனில் உள்ள பார்க் ராயல் ட்யூஒ ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அப்போது ரேஞ்ச் ரோவர் காரும் டெல் சாகாரன் மோதிக் கொண்டுள்ள நிலையில் ரேஞ்ச் ரோவர் காரில் இருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அதிலிருந்து மற்ற இருவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில் டெல்ஸா காரில் இருந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்ட போதும் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிய வந்திருக்கிறது. இதற்கு இடையே இந்த விபத்தில் சிக்கிய கார் மோதிய வேகத்தில் அருகே இருந்த ரயில் தண்டவாளத்தில் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் கிடந்ததே காண முடிகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கும் தகவல் தெரிந்தாலோ காட்சிகள் இருந்தாலும் தங்களை தொடர்பு கொண்டு கூறலாம் என போலீசார் கூறியுள்ளார்கள்.