இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பிரான்ஸ் அரசு தங்கள் மக்களுக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பிரான்ஸ் அரசு தங்கள் மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கை நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது பிரான்ஸ் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.
அரசியல் கருத்துக்களுக்காக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பயணம் மேற்கொள்ள உள்ளூர் பயண ஏஜென்சிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் எரிபொருள் பெறுவது கடினம். எனவே பொது போக்குவரத்தும் கடும் பாதிப்படைந்திருக்கிறது. நாடு முழுக்க மின்தடையும் இருக்கிறது. எனினும், முன்பை விட தற்போது நிலை படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.