தேவையான பொருட்கள்:
இறால் – அரைக்கிலோ
பாஸ்மதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தயிர் – ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
மல்லித்தழை – சிறிதளவு
புதினா – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
இரால் ஊறவைக்க:
இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் கால் ஸ்பூன்
உப்பு மஞ்சள் தூள் சிறிதளவு
தாளிக்க:
பட்டை சிறு துண்டு லவங்கம் மூன்று ஏலக்காய் மூன்று பிரியாணி இலை ஒன்று அன்னாசிப்பூ பாதி எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க மேல் கொடுத்தவாறு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். பச்சைமிளகாய் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வைக்கவும்.பின் இறால் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகமாக வதக்க கூடாது. தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து பின் 2 கப் அரிசிக்கு மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசியை நன்கு வடித்து போடவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சிறிதளவு ,நெய் சிறிதளவு, புதினா சேர்த்து நன்கு கிளறி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். இறக்கி 10 நிமிடம் கழித்து நன்கு கிளறி பரிமாறவும் சுவையான இறால் பிரியாணி தயார்.