Categories
உலக செய்திகள்

15 அடி உயரம்… கீழே விழுந்த டான்ஸர்… மீண்டும் ஆடிய நெகிழ்ச்சி சம்பவம்… குவியும் பாராட்டுக்கள்..!!

அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றில் கம்பத்தின் உச்சியில் நடனமாடிய பெண் கீழே விழுந்த பிறகு மீண்டும் நடனத்தை தொடரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த ஞாயிற்று கிழமை நிகழ்ச்சி ஓன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களுள் ஜெனியா என்ற பெண் அந்தரத்தில் 2 கம்பிகளுக்கு இடையே நடனமாடிக் கொண்டிருந்தார். மற்றொருவர் கீழே நடனமாடி கொண்டிருந்தார். அப்போது 15 அடி உயர கம்பத்தின் உச்சியில் நின்று நடனமாடிய ஜெனியா திடீரென்று தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

Image result for STRIPPER FORCED TO HAVE JAW WIRED SHUT AFTER BEING FILMED FALLING 15FT FROM POLE AND LANDING ON FACE

ஆனாலும் அவர் பெரிதாக எடுக்கவில்லை. காயமடைந்த பிறகும் கூட அந்த பெண் தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் நடனமாடிய ஜெனியா தற்காலிக பணியாளர் என்பதால் அவருக்கு இழப்பீடு தரமுடியாது என விடுதி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கீழே விழுந்து காயமடைந்த பிறகும் டான்ஸ் ஆடியதற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |