இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா சுமார் 21 ஆயிரம் டன் உரங்களை அந்நாட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி கடும் பாதிப்படைந்திருக்கிறது. சுமார் மூன்று மாதங்களாக பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை தற்போது படிப்படியாக நிலையை சரி செய்ய முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் கொழும்பு நகரத்தில் இருக்கும் இலங்கைக்குரிய இந்திய தூதரகம், தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நட்புறவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நறுமணம் சேர்க்கக்கூடிய விதத்தில் சுமார் 21,000 டன் உரத்தை இந்திய சிறப்பு ஆதரவு திட்ட அடிப்படையில் இந்திய தூதர் இலங்கைக்கு அளித்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.