Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: இனி இவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு….. தமிழக அரசின் இனிப்பான செய்தி….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனையடுத்து 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் முதல் கூடுதல் ஆகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போன்றே தமிழகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அகில இந்திய பணி அலுவலர்களுக்கும் மூன்று சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

ஏற்கனவே தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது போல தமிழகத்தில் உள்ள இந்திய பணி அலுவலர்களுக்கும் அகவிலைப்படி வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்தது.

Categories

Tech |