Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமண ஆர்டரால் வந்த முன்விரோதம்…. பெண் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேற்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடபாதிமங்கலத்தில் ஸ்டுடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண ஆர்டர் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. கடந்து சில நாட்களுக்கு முன்பு திட்டச்சேரி பகுதியில்  மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மகேந்திரனை சிவபாலன் தனது நண்பர்களான அருண்பிரபு உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து மகேந்திரனை அரிவாளால் சரமாரிய வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இது குறித்து மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிவபாலன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 பேரும் ஜாமீனில்  வந்தனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த  மகேந்திரனின் நண்பர்களான விக்னேஷ், அமீத், ராஜசேகர், ஆசைத்தம்பி, முத்துக்குமரன், செந்தில்குமார் என்ற 6  பேர் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்த அருண்பிரபுவின்  வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதனை அருண்பிரபுவின் தாய் அனுராதா தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அனுராதாவை சரமாரியாக திட்டி கையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அனுராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |