சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம், திண்டல், பழையபாளையம், பேருந்து நிலையம், கொல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். முன்னதாக பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.