ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 289 ரன்கள் எடுத்தது.
இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி மதியம் 12:45 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளார்.. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு பதிலாக அவேஷ் கான் மற்றும் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுலும், ஷிகர் தவனும் களம் இறங்கினர்.. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.. அதன்பின் கே.எல் ராகுல் 30 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 40 ரன்களில் வெளியேறினார்.
அதனைத்தொடர்ந்து சுப்மன் கில் – இஷான் கிஷன் இருவரும் ஜோடி சேர்ந்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிஷன் ஒருபுறம் நிதானத்துடன் விளையாட, மறுபுறம் கில் கில்லியாக ஆடினார்.. இருவரும் அரைசதம் கடக்க, இஷான் கிஷன் 43ஆவது ஓவரில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.. பின் வந்த சாம்சன் 2 சிக்ஸர் அடித்து அதிரடியை தொடங்கிய நிலையில், 15 ரன்னில் வெளியேறினார்.. வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இதற்கிடையே கில் சூப்பராக ஆடி சதமடித்து கடைசியில் ஆட்டமிழந்தார்.. சர்வதேச போட்டியில் கில்லுக்கு இது முதல் சதமாகும்..
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 289 ரன்கள் எடுத்தது. தீபக் சாஹர் 1 ரன்னிலும், குல்தீப் யாதவ் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.. சுப்மன் கில் 97 பந்துகளில் 130 ரன்கள் (15 பவுண்டரி 1 சிக்ஸர்) எடுத்தார்.. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பிராட் இவன்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.