நாட்டில் சாலை விபத்துக்களால் ஆண்டுதோறும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்,அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் என விபத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும் சாலை பராமரிப்பு சரியில்லாததும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சாலை பள்ளங்களால் மட்டும் சுமார் 2300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்மையில் கேரளா உய்ரநீதிமன்றம், சாலை பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் காரணம் என மாவட்ட ஆட்சியர் உரிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.