Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : 2 மாற்றம்….. களமிறங்கும் சாஹர்….. ருதுராஜிக்கு வாய்ப்பு இல்ல…. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்..!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.. 

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி மதியம் 12:45 மணியளவில் நடைபெற இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல்  பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளார்.. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு பதிலாக அவேஷ் கான் மற்றும் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி முதல் 2 போட்டியிலும் இரண்டாவது பேட்டிங் செய்து சேஸிங்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி களமிறங்கும் வீரர்கள் : 

ஷிகர் தவான், சுப்மன் கில், கே.எல்.ராகுல் (கேப்டன்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (வி.கே.), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், தீபக் சாஹர், குல்தீப் யாதவ்.

ஜிம்பாப்வே அணி களமிறங்கும் வீரர்கள் : 

டி கைடானோ, சீன் வில்லியம்ஸ், இன்னசென்ட் கையா, சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகாப்வா (கேப்டன் & wk), டோனி முனியோங்கா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, ரிச்சர்ட் ங்கராவா, பிராட் எவன்ஸ், விக்டர் நியாச்சி

Categories

Tech |