Categories
உலக செய்திகள்

“எங்க அப்பாவை கூப்பிட ஆம்புலன்ஸ் வரல” பாதிக்கப்பட்ட நபருக்கு மிரட்டல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

மத்தியப்பிரதேசத்தில் ஒருவர் தன் நோய்வாய்ப்பட்ட தந்தையை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் கை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தவறான மற்றும் பொய்யான தகவலை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக கூறி 3 பத்திரிகையாளர்கள் மீது மத்தியப்பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது பிந்தைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், ஏமாற்றுதல், பொதுத்தீங்கு விளைவித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2008ன் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறை சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளது.

முன்பாக சென்ற சில நாட்களுக்கு முன்பு  இச்சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அந்நபர் கூறியதாவது, பலமுறை முயற்சித்தும் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறினார். இந்த வீடியோ ஆகஸ்ட் 15 ஆம் தேதி சமூகஊடகங்களில் பகிரப்பட்டது மற்றும் பல சேனல்கள் செய்திகளை வெளியிட்டது. இது தொடர்பாக தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சதீஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் இச்செய்தி தவறானது என்பதை போலீஸ் கண்டறிந்தது மற்றும் சம்பந்தப்பட்ட குடும்பம் அனைத்து அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெற்று வருதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதன்பின் தபோ சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜீவ் கவுரவ் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் விசாரணையில் வெளியானவை பொய் என பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் கூறுகின்றனர். மேலும் “விசாரணையில் தங்களுக்கு எதிராக அறிக்கைகள் கொடுக்க அந்நபரின் குடும்பத்துக்கு அரசு நிர்வாகத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கிறது” என ஒரு பத்திரிகையாளர் கூறினார். அத்துடன் அரசாங்க அதிகாரிகள் சிலர் அந்நபரின் வீட்டிற்குச் சென்று, அவர் பெற்று வரும் அரசின் சலுகைகளைப் நிறுத்திவிடுவதாக மிரட்டினர் என்று அந்த நபர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது.

அதுமட்டுமின்றி தன்னிடம் அதிகாரிகள் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றதாகவும் அந்நபர் கூறினார். ஊடகங்களில் இததை பற்றி எதுவும் பேசக்கூடாது என மிரட்டப்பட்டதாகவும் அந்த நபர் தெரிவித்தார். இதனிடையில் செய்தியாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்காக அதிகாரிகளால் அந்நபரின் குடும்பத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா என்பது வீடியோவில் கூறப்படவில்லை. இப்போது 3 பத்திரிகையாளர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் பற்றி கருத்து தெரிவிக்க பிந்த்சரக போலீஸ் சூப்பிரண்டு ஷைலேந்திர சிங் சவுகான் மறுத்து விட்டார்.

Categories

Tech |