நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்த பெற்றோர் சம்பந்தத்துடன் தனது 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்திரா, லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் இடையில் அவரது மகன்கள் மட்டும் அப்பா அம்மா இருவருடனும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரின் பிரிவிற்கு பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக இருவரும் ஒன்றாக வந்தனர். இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தனது மகனுக்காக இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பதை ரசிகர்கள் வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.