Categories
தேசிய செய்திகள்

ALERT: PF கணக்குதாரர்களே உஷார்…. மிகப்பெரிய ஆபத்து….. EPFO நிறுவனம் திடீர் எச்சரிக்கை….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி EPFOபயனாளிகள் தங்களது தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத்தளம் அல்லது மொபைலில் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால் சமீபகாலமாக pf கணக்குத்தாரர்களின் சுய விவரங்களை சில மோசடி கும்பல்கள் குறி வைத்து கொள்ளையடித்து வருகின்றன.

இந்த கும்பல் PF ஃபைனாளர்களிடம் ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் உள்ளிட்ட வங்கி கணக்கு விவரங்களை கேட்கின்றனர். இது குறித்து விவரம் அறியாமல் EPFO பயனாளிகள் எந்த ஆபத்தும் இல்லை என எண்ணி சொந்த விவரங்களை பகிர்ந்து விடுகிறார்கள். குறிப்பாக ஓடிபி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி சில மோசடி கும்பல் கொள்ளையடித்து வருகிறது.

எனவே பயனாளிகள் தங்களது ஆதார் எண் உள்ளிட்ட வங்கி கணக்கு சொந்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. EPFOநிறுவனம் எதற்காகவும் பயனாளர்களின் சொந்த விவரங்களை கேட்காது எனவும் விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |