Categories
தேசிய செய்திகள்

மகளை கொலை செய்து….. “தலை வேறு உடல் வேறாக வீசிய கொடூரம்”….. நடுநடுங்க வைத்த சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம்,  மீரட், லிசாரி கேட் பகுதியில் இளம்பெண் ஒருவரின் தலை இல்லாத உடல் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணின் பெயர் சானியா ரிஹான் என்பதும், அவரது பெற்றோர்களே அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. அதாவது சானியா வேறு சமூகத்தை சேர்ந்த வாசிம் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சானியாவின் பெற்றோர்கள் வாசிமை சந்திக்க தடை விதித்துள்ளனர். இதனால் சானியா, தனது பெற்றோருக்கு இரவு பாலில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து தூங்க வைத்துவிட்டு, தனது காதலன் வாசிமை இரகசியமாக சந்தித்து வந்தார்.

இந்த நிலையில், சானியா மீது சந்தேகமடைந்த பெற்றோர் சம்பவத்தன்று அந்த பாலை குடிக்கவில்லை. ஆனால் இது தெரியாத சானியா, தனது காதலனை சந்திக்க சென்றபோது பெற்றோரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் சானியாவின் பெற்றோர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டனர். பின்னர் அவரது சடலத்தை தலை வேறு பகுதியிலும், உடல் வேறு பகுதியிலும் போட்டு விட்டனர். காவல்துறை விசாரணையில் வெளிவந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |