Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…..! தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து…. அதிர வைத்த ஆந்திர சைக்கோ….!!!!

ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்த சந்தக ராம்பாபு என்பவர், தனது 18 வயதில் ராஜமுந்திரியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ராம்பாபு தனது மனைவி, குழந்தைகளுடன் ஐதராபாத்தில் குடியிருந்தபோது அந்த வீட்டின் உரிமையாளருடன் அவரது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை 2018ம் ஆண்டில் பிரிந்தார். பின்னர் தங்குவதற்கு இடமின்றி ராம்பாபு தவித்து வந்தார். தற்போது 49 வயதாகும் ராம்பாபு, மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால்தான், தன் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டது என்று நினைத்து, சைக்கோவாக மாற தொடங்கி, பெண்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டார்.

இதனால் அவர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்வது, பின்னர் அவர்களை பலாத்காரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் வயதான தம்பதியையும் மூன்று குடும்ப பெண்களையும் அடுத்தடுத்து கொலை செய்துள்ளார் . இந்தநிலையில் போலீசார் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ராம்பாபுவை பிடித்து விசாரித்தபோதுதான், அவர் கொலையாளி என்பது வெளிச்சத்த்ற்கு வந்தது.

 

Categories

Tech |