மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், பாரதி ராஜ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். ரிலீசான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகின்றது இந்த படம். இதனால் திரையரங்குகளில் முதல் நாளை காட்டிலும் அடுத்த நாட்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கஸ்தூரிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மித்ரன் ஜவகர் அவருடைய நான்காவது படத்தில் தனுஷை வைத்து இயக்கியிருக்கின்றார்.
சமூக வலைத்தளங்களில் படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்வியூஸ் குவிந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக நித்தியாமேனனின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள் ரசிகர்கள். அந்த வகையில் இயக்குனர் செல்வராகவும் திருச்சிற்றம்பலம் படம் குறித்து ட்விட் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது திருச்சிற்றம்பலம் பார்த்தேன் என்ன ஒரு அழகான படம். இப்படி ஒரு பீல் குட் படத்தை பார்த்து கொஞ்ச நாள் ஆகிவிட்டது. பாரதிராஜா சார், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் தனுஷ் போன்றோரின் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசை போன்றவை குறிப்பிடத் தகுந்தவை என குறிப்பிட்டு இருக்கிறார்.