கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனைவி கண்முன்னே கணவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி அருகே இருக்கும் கூழைமூப்பனுறை சேர்ந்தவர் அர்ஜுன். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும் யஸ்வந்த், விவன் என்ற இருமகன்களும் இருக்கின்றனர். இவர் சிமெண்ட் சீட்டு போட்ட தன்னுடைய வீட்டில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டின் சிறிது தூரத்தில் இருக்கும் தாயார் வீட்டில் விவனை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் கஸ்தூரியும் யஸ்வந்த்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அர்ஜுன் குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே மேலே தகர்த்தாலும் சுற்றிலும் கீற்றாலும் செய்யப்பட்ட ஒரு சிறிய வீடு இருக்கின்றது. அதில் அர்ஜுன் தூங்க சென்றார்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அர்ஜுன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு திடீரென தீப்பிடித்து எறிந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் கஸ்தூரியை வெளியே நின்றவாறு அழைத்து இருக்கின்றார். சத்தம் கேட்டு வெளியே வந்த கஸ்தூரி கணவர் தூங்கிக் கொண்டிருந்த வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்து அலறி அடித்துக் கொண்டு கணவரை வெளியே வருமாறு கூறியுள்ளார். அதைக் கேட்ட அர்ஜுன் என்னால் வெளியே வர முடியவில்லை என அழுதபடி கூறியிருக்கின்றார். பின் முழுவதுமாக தீ ஆக்கிரமித்ததால் அவரால் பேச முடியவில்லை.
பின் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணித்தார்கள். பின் உள்ளே சென்று பார்த்த பொழுது அர்ஜுன் உடல் கருகி கரிக்கட்டையாக இருந்தது தெரியவந்தது. இதை பார்த்த கஸ்தூரியும் அவரின் உறவினர்களும் கதறி கதறி அழுதார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அர்ஜுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.