Categories
உலக செய்திகள்

அர்ஜென்டினாவில் பயங்கரம்… பிறந்த குழந்தைகளை கொன்ற செவிலியர்…!!!

அர்ஜென்டினா நாட்டில் ஆரோக்கியமாக பிறந்த இரண்டு குழந்தைகளை கொன்றதாக ஒரு செவிலியர் கைதாகியிருக்கிறார்.

அர்ஜென்டினா நாட்டில் கோர்டாபா எனும் நகரத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் செவிலியர் ஆரோக்கியமான முறையில் பிறந்த இரண்டு குழந்தைகளை கொன்றதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். பிரெண்டா அகுரோ என்ற 27 வயதுடைய செவிலியர் மேலும் மூன்று குழந்தைகளை கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு நச்சுத்தன்மை நிறைந்த பொருளை கொடுத்து குழந்தைகளை கொன்றிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இறந்த குழந்தைகள் மட்டுமின்றி மேலும் புதிதாக பிறந்த எட்டு குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகளின் உடலில் பொட்டாசியம் அதிக அளவில் இருந்ததாகவும், இது தான் குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நடக்கிறது.

Categories

Tech |