கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலகுறும்பனை பகுதியில் தேவதாசன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேவதாசன் கடலில் வீசிய வலையை இழுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் உணவு சாப்பிட்டு விட்டு கடல் நீரில் கையை கழுவிய போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தால் தேவதாசன் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து அறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சக மீனவர்களும் தேவதாசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து துறைமுக பகுதியில் மிதந்து கொண்டிருந்த தேவதாசனின் உடலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.