நீங்கள் ஒவ்வொரு முறையும் சிரிக்கும்போதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து விளையாடும் போதும் பாடும் போதும் அம்மா என்று கூப்பிடும் போதும் எனது மனம் உருகிவிடுகிறது என சன்னி லியோன் தனது இரு மகன்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் தனது மகன்கள் அம்மா என்று கூப்பிடும்போது மனம் உருகிவிடுவதாக சன்னிலியோன் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளார்.
கூகுளில் ரசிகர்களாலும் இணையவாசிகளாலும் அதிகமாகத் தேடப்படும் நபரான சன்னி 2011ஆம் ஆண்டு டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் சன்னி லியோன் – வெப்பர் தம்பதியினர் 2017ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தனர். அக்குழந்தைக்கு ‘நிஷா கவுர்’ எனப் பெயரிட்டனர். அதைத் தொடர்ந்து அடுத்தாண்டே வாடகைத்தாயின் மூலமாக இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றனர்.
தற்போது ஆண்குழந்தைகள் இருவரும் தங்களது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டம் குறித்து தனது ட்விட்டரில் சன்னி லியோன், ”எனது இரண்டு குழந்தைகளுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் இருவரும் எனது வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஒவ்வொரு நாளும் தருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் சிரிக்கும்போதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து விளையாடும்போதும் அம்மா என்று கூப்பிடும் போதும் எனது மனம் உருகிவிடுகிறது. எனது குட்டி தேவ தூதர்களை கடவுள் ஆசீர்வதிப்பார்” என்று ட்வீட் செய்துள்ளார்.
சன்னி தற்போது ‘வீரமாதேவி’, ‘கோக்ககோலா’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இதுதவிர ‘காமசூத்ரா’ வெப் சீரிஸிலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Happy 2nd Birthday to my baby boys!
You both bring so much joy and happiness to my world every single day. Every time you smile, laugh , play, jump, dance, sing and say mama, my heart melts every time! God Bless you both my little angels from God! pic.twitter.com/DgEO1ySx3u— Sunny Leone (@SunnyLeone) February 12, 2020