Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறில்லை….. வெளியான அறிக்கை….!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவ குழு தனது 3 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , “ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் அவருக்கு இருந்தது. அதற்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்த போது திராட்சை, கேக் ,இனிப்புகளையும் ஜெயலலிதா சாப்பிட்டார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |