Categories
மாநில செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் உயிரை மாய்த்த பெண்

தொழிலில் நஷ்டம் காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர் அருகே சுந்தரமூர்த்திபுறத்தை சேர்ந்தவர் பிரதீப்  விஜயலட்சுமி தம்பதியினர். பிரதீப் புதுவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமி வில்லியனூர் கோட்டைமேடு அருகில் பால்பூத்  வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட நஷ்டத்தினால் பால்பூத்தை மூடி உள்ளனர்.

தொழிலில் நஷ்டம் பட்டதை எண்ணி விஜயலட்சுமி மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.  நேற்று கணவரிடம் பேசிய விஜயலட்சுமி பால்பூத்தை திறக்க வேண்டும் எனக்கூறி  வருத்தப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நேற்று மனவேதனையில் இருந்த விஜயலட்சுமி தற்கொலை செய்துகொள்ள எண்ணி தூக்கு மாட்டிக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் பிரதீப் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஜயலட்சுமியை மீட்டு வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஜயலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பிரதீப் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |