Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர்…. மதுபோதையில் இருந்த தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சிவாஜி நகரில் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இவரது மனைவி பிரிந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை மட்டும் உள்ளது. இந்த குழந்தை பாலமுருகனின் சித்தி வீட்டில் வளர்ந்து வருகிறது. மேலும் பாலமுருகன் அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் வசிக்கும் முத்துராஜ் என்ற கட்டிட தொழிலாளி ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

இதனால் பாலமுருகன், முத்துராஜிடம் தான் கடனாக கொடுத்த ரூ.10 ஆயிரத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு முத்துராஜ் தற்பொழுது தன்னிடம் பணம் இல்லை, சில நாட்களில் தந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் பாலமுருகன் முத்துராஜிடம் பணத்தினை உடனே தர வேண்டும் என்று கூறி அவதூறாக பேசியுள்ளார். இதனால் முத்துராஜ், பாலமுருகனின் சித்தி ரேவதியிடம் சென்று பணத்தினை விரைவில் தருவதாகவும் மேலும் அவர் அவதூறாக பேசுவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரேவதி, பாலமுருகனை சத்தம் போட்டதும் மது போதையில் இருந்த பாலமுருகன் திடீரென ரேவதிவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ரேவதி கோவில்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் மது போதையில் முத்துராஜிடம் எப்படி நீ பணம் கேட்டதை சித்தியிடம் கூறினாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், தான் வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுருகனின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள முத்துராஜை வலைவீசிதேடி வருகின்றனர்.

Categories

Tech |