Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை”…. எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கை..!!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சசிகலா உட்பட 150 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் விசாரணை இன்னும் முடியவில்லை.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த நவம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆராய மருத்துவர் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் ஏழு பேர் உள்ளடக்கிய எய்ம்ஸ் மருத்துவ குழு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆராய்ந்து வந்தது..

இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் ஏழு பேர் உள்ளடக்கிய எய்ம்ஸ் மருத்துவ குழு 3 பக்க அறிக்கையை அளித்துள்ளது. வரும் 23ஆம் தேதி இந்த மருத்துவ குழுவானது தனது அறிக்கையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆணையத்தின் கால அவகாசம் வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், நேற்று இரவு முக்கியமான அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்துள்ளது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  காலகட்டத்தில் அவர் உடல்நிலை குறித்து பல்வேறு புகார்கள், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவக்குழு கொடுத்துள்ள அறிக்கையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரை அளவு அதிகம் இருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்ததது. அதற்கு அப்போலோ மருத்துவர்கள் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை.

29. 09. 2016 அன்று இரவு 10 மணிக்கு ஜெயலலிதா இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ்ஸை தொடர்பு கொண்டதாகவும், அப்போது வந்து உடல் நிலையை பார்த்து முதல் கட்ட சிகிச்சை அளித்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது என்று சொல்லப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இன்சுலின் உட்பட நோய் தன்மை ஏற்ப மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட அப்போலோ சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்துள்ளது. மருத்துவமனையில் இருந்தபோது திராட்சை, இனிப்பு, கேக்கை ஜெயலலிதா சாப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 3ஆம் தேதி ஜெயலலிதா உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. டிசம்பர் 4 ஆம் தேதி மூச்சு விடுவதற்கும் பெரும் சிரமப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து இதயம் செயலிழந்து எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுள்ளது. 2016 டிசம்பர் 5ஆம் தேதி உரிய மருத்துவ நடைமுறை அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் எவ்வித செயலும் இல்லை என்பது உறுதியானதை அடுத்து, டிசம்பர் 5ஆம் தேதி 11:30 மணி அளவில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.எனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எவ்வித தவறுகளும் சிகிச்சையில் இல்லை என்று உரிய சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்ககூடிய  ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சைகள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரத்தத்தின் பாக்டீரியா அதிக அளவில் பரவி இருக்கிறது. இதுபோல உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இறுதியாக உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

எய்ம்ஸ் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் கொடுத்த அறிக்கை :

 

 

 

 

 

Categories

Tech |