Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறை….. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. குவியும் கூட்டம்…!!!

தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதுவும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று அதிகாலை முதலில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதனால்வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகனூர் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |