Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..எதிலும் யோசித்து செயல்படுங்கள்…குழப்பங்கள் தயவு செய்து அடையாதீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாகவே இருக்கும். இழுபறியான காரியங்களில் வெற்றி கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று  எதையும் ஒரு முறைக்கு ,பல முறை யோசித்து செய்யுங்கள், அது போதும். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.

உங்கள் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் எந்த விஷயங்களிலும் ஆலோசனை செய்யாமல் காரியத்தில் ஈடுபட வேண்டாம். இன்று  ஓரளவு தான் சகித்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கும். கூடுமானவரை பொறுமையாக இருங்கள். குழப்பம் தயவுசெய்து அடையாதீர்கள். எதையாவது சிந்தித்த வண்ணம் இன்று இருந்து கொண்டே இருப்பீர்கள்.

புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. பண வரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமாக  பெரியோரின் ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். இன்று  மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கூடுதலாக உழையுங்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நீங்கள் நடந்து கொள்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |