மும்பை போலீசாருக்கு 26/11 பாணியில் தாக்குதல் அச்சுறுத்தல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் வர்த்தகத் தலைநகரில் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு ஒரு செய்தி வந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். அச்சுறுத்தல்கள் வாட்ஸ்அப் செய்தியில் இருந்து வந்துள்ளன. அண்டை நாட்டிலிருந்து, அனுப்பியவரின் விவரங்கள் அல்லது தாக்குதல் எப்போது நடக்கும் என்பது பற்றி தகவல் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை.
அடுத்த பயங்கரவாத தாக்குதல் மும்பை நகரில் 26/11-ல் நடந்த தாஜ் ஹோட்டல் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களின் நினைவுகளை மீட்டெடுக்கும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், இந்த மிரட்டலை மாநில அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மும்பையில், 3 ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் கூடிய ஒரு படகு ராய்காட் கடற்கரையில் சிக்கிய நிலையில், மாநிலம் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் நிராகரிக்கப்பட்டாலும், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ராய்காட் காவல்துறையினரால் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.