Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : சிக்சருடன் முடித்த சஞ்சு….. “ஜிம்பாப்வேவை கதறவிட்ட இந்தியா”…. தொடரை கைப்பற்றி அசத்தல்..!!

இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும் மூன்று ஒருநாள் தொடரின் 2ஆவது ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் தீபக் சாஹருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இந்திய நேரப்படி 12:45 மணியளவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ஜிம்பாவே அணி கடந்த போட்டியை போலவே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே
அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும், ரியான் பர்ல் 39 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர். காயத்திலிருந்து குணமடைந்து நீண்ட காலத்திற்குப் பிறகு களம் இறங்கிய கேஎல் ராகுல் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்டர் நியாச்சியின் 2ஆவது ஓவரில் 1 ரன்னில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.. இதையடுத்து ஷிகர் தவான் – சுப்மன் கில் கூட்டணி பொறுப்புடன் ஆடிய நிலையில், தவன் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த இஷான் கிஷன் 11ஆவது ஓவரின் போது  6 ரன்னில் நடையை கட்ட, சிறப்பாக ஆடிவந்த சுப்மன் கில்லும் 13ஆவது ஓவரில் 33 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அதனை தொடர்ந்து சஞ்சு சம்சனும், தீபக்ஹூடாவும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி வெற்றியை நெருங்கும் நிலையில், ஹூடா 25 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அடுத்தபடியாக அக்சர் பட்டேல் களமிறங்கினார். பின் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட சாம்சன் சிக்ஸர் அடித்து முடித்து வைத்தார்.. இந்திய அணி 25.4  ஓவரில் 5 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்து வென்றது. சஞ்சு சாம்சன் 4 சிக்ஸர், 3 பவுண்டரி உட்பட 43( 39) ரன்களுடனும், அக்சர் பட்டேல் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக லூக் ஜாங்வே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.. இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |