Categories
சினிமா

எக்கச்சக்க விருதுகளை வென்ற “சஷ்தி” குறும்படம்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

கேத்தி மற்றும் ராப்பி பிலிம்ஸ் சார்பாக தயாராகி இருக்கும் குறும்படம் “சஷ்தி” ஆகும். ஜூட்பீட்டர் டேமியான் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார். இவற்றில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த குறும்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே போன்றவற்றில் வெளியாகி இருக்கிறது.

லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகி இருக்கும் இந்த குறும்படம், தாய் மற்றும் மகனுக்கு இடையில் உள்ள உறவை மையப்படுத்தி வெளியாகியுள்ளது. இந்த குறும் படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை 25 திரைப்படம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது. இவ்வாறு பல விருதுகளை பெற்றுவரும் இந்த குறும்படத்திற்கு பலரின் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

Categories

Tech |