Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை….. என்ன காரணமா இருக்கும்?….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தில் பாலசுப்ரமணியன்(32) என்பவர் வசித்து வருகிறார். அவர் கட்டிட தொழிலாளி. இவரும் குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த தேவயானி(25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரணிகா(3) என்ற மகள் உள்ளார். பாலசுப்ரமணிக்கும் தேவையானிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி இரவு இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேவயானி வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் விரைந்து சென்று தேவயானி உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையைடுத்து தேவையானி அம்மா ரமணி அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், எனது மகள் தேவயானி சாவில் சந்தேகம் உள்ளது . இது குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேவயானிக்கு திருமணம் நடைபெற்று 4 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |