Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகம் தான் டாப்…. அதுவும் எதுல தெரியுமா?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்திற்கான விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் பட்டியலில் அதிக புள்ளிகளை பெற்று தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அரிசி, கோதுமை, கம்பு, தானியங்கள், பால், வெங்காயம், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான பொது குறியீட்டு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுள்ளதாகவும் அதில் 1301 புள்ளிகளுடன் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கிராமப்புற தொழிலாளர்களை பொறுத்தவரையில் 20 மாநிலங்களில் தமிழகம் 1290 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Categories

Tech |