Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கு – சரணடைந்த மாவோயிஸ்ட்..!!

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில் சந்தேகிக்கப்படுபவர், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் சரணடைந்தார்.

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில், குற்றவாளியைக் கண்டுபிடித்து தருபவருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் மாவோயிஸ்ட் ஜிப்ரோ ஹபிகா சரணடைந்தார்.

இதுகுறித்து, மல்கன்கிரி காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் டி கிலாரி கூறும்போது, ‘2012ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) நிறுவனத்தைச் சேர்ந்த ஜிப்ரோ ஹபிகா (30), நக்சலிசத்தின் வன்முறை பாதையில் ஏமாற்றமடைந்த பின்னர் ஆயுதங்களை கைவிட முடிவு செய்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

Image result for Andhra Pradesh Maoist surrenders to court for killing a MLA

மேலும், காவல் துறையினரின் அறிக்கை ஒன்றில், செப்டம்பர் 2018ஆம் ஆண்டு ஆந்திராவின் அரகு பள்ளத்தாக்கின் துங்ரிகுடமண்டலில் எம்.எல்.ஏ கே.எஸ். ராவ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா ஆகியோரைக் கொன்ற வழக்கில் ஹபிகாவுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

Image result for Maoist Involved In Killing Of Andhra MLA Surrenders Before Odisha

மேலும், 2016ஆம் ஆண்டு டிசம்பரில் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில், பொட்டாங்கி காவல் நிலையப் பகுதியில் புட்டெருவில்லேஜில் நாயப் சர்பஞ்ச் ஜி சுந்தர் ராவ் கொலை, வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்திலும் ஹபிகாவுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |