மறைந்த முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தியின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் இன்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் குடும்பத்துடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தனது தந்தையின் பிறந்த நாளை ஒட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள twitter பதிவில், அப்பா எப்போதும் நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள். இந்தியாவுக்காக நீங்கள் கண்ட கனவை நான் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.