Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டுக்கு ரயில் மூலம் 1000 டன் நெல் வருகை…. அதிகாரிகள் வெளியிட்ட மிக முக்கிய தகவல்… !!!!

ஈரோடு மாவட்டம் பொது விநியோகத் திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரசி, கோதுமை, நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 1000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு நேற்று வந்தது.

அதனை தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டது. அதன்பிறகு ஈரோட்டில் உள்ள நுகர்வோர் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த நெல் மூட்டைகள் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக மாற்றம் செய்யப்பட்டு பொதுமகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |