Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாட்டின் போது…. பந்தடி பட்டு இளைஞர் மரணம்…. பெரும் சோக சம்பவம்…..!!!!!!

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தடி பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்ருப் நகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கிரிக்கெட் போட்டி இடையே வந்து அடிபட்டு ஹபீப் மண்டல் (30) என்ற இளைஞர் உயிரிழந்தார். கொல்கத்தாவில் இருந்து கிரிக்கெட் விளையாட வந்த அவர் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது பந்து அவரது மார்பில் வேகமாக தாக்கியதால் அவர் மயங்கி விழுந்ததை எடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவை சேர்ந்த இவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட டெல்லிக்கு வந்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மறுபக்கம் உயிரிழந்த இளைஞருக்கு தீராத நோய் பாதிப்பு ஏதாவது உள்ளதா என குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |