உத்திரபிரதேசத்தில் பல்லியா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில்அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஐந்து முக்கிய தீர்மானங்களை மக்களுக்கு வழங்கினார்.நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த ஐந்து தீர்மானங்களை மனதில் வைத்து கடமையின் பாதையில் சென்றால் இந்தியா நிச்சயம் வல்லரசாக மாறும். மேலும் வரும் நாட்களில் இந்தியா உலகை வழி நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் நாள்களில் இந்தியா உலகை வழிநடத்தும் என்று கூறினார். பல்லியா-வின் சிங்கம் என்று அறியப்படும் சிட்டு பாண்டே, நாடறிந்த புரட்சியாளர். அவரின் நினைவாகவே `பல்லியா பலிதான் திவாஸ்’ என்ற இந்த விழா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.