Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2019ல் 100 அடித்தார்….. “1000 நாட்கள் ஆகிடுச்சு”…..1 கூட இல்ல….. தடுமாறும் கோலி….. சோகத்தில் ரசிகர்கள்..!!

நேற்றுடன் விராட் கோலி சதம் அடித்து 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கவலையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரையில் 70 சதங்கள் விளாசியுள்ளார்..

கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சதம் அடித்துள்ளார்.. விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதங்களை விளாசாமல் இருப்பது அவர் மீது விமர்சனங்களை எழ செய்கிறது. அது மட்டும் இல்லாமல் நடந்து முடிந்த பல தொடர்களில் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார். இது அனைவரது மத்தியிலும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றுடன் விராட் கோலி சதம் அடித்து 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. கடைசியாக சதம் அடித்ததற்கு பின் அவர் 24 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக விராட் கோலி இந்த ஆண்டில் 94 ரன்கள் அடித்துள்ளார்.. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக சதங்கள் அடிக்க முடியாமல் திணறி வருகிறார் விராட் கோலி..

Image

தனது பேட்டிங்கால் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள கோலி ஆயிரம் நாட்கள் ஆகியும் ஒரு சதம் கூட அடிக்காமல் இருப்பது பற்றி சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் சோகமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. எனவே விராட் கோலி அடுத்த சதத்தை விரைவில் அடிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

https://twitter.com/sportstigerapp/status/1560486588378820608

Categories

Tech |