நடிகர் விக்ரம் கோப்ரா திரைப்படம் பற்றி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் குமார் தயாரித்துள்ளார்.
கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனையடுத்து தற்போது படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் கோப்ரா ரிலீஸ் ஆகும்.
இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் விக்ரம் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்பொழுது கோப்ரா திரைப்படம் குறித்து பேசிய அவர், இத்திரைப்படம் வெறும் கெட்டப்களை பற்றிய படம் மட்டும் இல்லை. கோப்ரா ஒரு எமோஷனல் டிராமா படம். எனவே கோப்ரா திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.