Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் லைஃப்”….. இணையத்தை தெறிக்கவிடும் நயன்-விக்கி பிக்ஸ்….!!!!!!

நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றது.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது பார்சிலோனாவில் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றார் விக்னேஷ் சிவன். அண்மையில் பார்சிலோனா தெரு வீதிகளிலும் சந்துக்களிலும் இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் விக்னேஷ் சிவனை அணைத்தப்படியும் அவர் மீது சாய்ந்த படியும் கைகளை கோர்த்து நடந்து செல்வது போன்றும் கணவர் மீது சாய்ந்து எடுத்தது போலும் நயன்தாரா போஸ் கொடுத்துள்ளார். இப்புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் லவ் லைஃப் எனவும் சூப்பர் டேலண்ட் ஸ்பேனிஷ் போட்டோகிராபர் எடுத்த லவ்லி பிக்சர்ஸ் எனவும் பதிவிட்டு இருக்கின்றார்.

https://www.instagram.com/p/ChZ3leuvwtq/?utm_source=ig_embed&ig_rid=3de3ca18-dd6d-4d31-8839-dbe0f2906791

Categories

Tech |