Categories
தேசிய செய்திகள்

Boyfriendஐ மாற்றுவது போல…… ஒரு முதல்வரை போய் இப்படி…. சர்ச்சை…!!!!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியே ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்ததுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரது இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, தான் வெளிநாடு சென்றபோது, அங்கு பெண்கள் தங்கள் பாய் பிரெண்டை இஷ்டத்துக்கு மாற்றுவதை போல கண்டதாகவும், அதுபோல நிதிஷ்குமார் கூட்டணியை மாற்றிக் கொள்கிறார் எனவும் பேசினார். அவரது இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Categories

Tech |